அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா உத்தரவுப்படி, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. T.T.V. தினகரன் இன்று தலைமைக் கழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திரு. T.T.V. தினகரனை அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக நியமித்து, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா அண்மையில் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு திரு. தினகரன் இன்று வருகை தந்து, துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்று பணிகளை தொடங்கினார். அவருக்கு கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
