www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

மாண்புமிகு அம்மா, சின்னம்மா ஆசியுடன், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச்செயலாளர் TTV தினகரனுக்கு, அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர், திரளான கழகத் தொண்டர்களுடன் தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் : பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என தொகுதி மக்கள் உறுதி



சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு அம்மா, சின்னம்மா ஆசியுடன் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன், இரண்டாவது நாளாக நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர், திரளான கழகத் தொண்டர்களுடன் தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா ஆசியுடனும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வாழ்த்துகளோடும் "அ.இ.அ.தி.மு.க. அம்மா" சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் திரு. TTV தினகரன், வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் பிரச்சாரத்தை தொடங்கினார். தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா விட்டுச்சென்ற பணிகளை நிறைவேற்றி, R.K. நகர் தொகுதியை, அனைத்து அம்சங்களிலும் வளர்ச்சி பெறச்செய்து, இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக உருவாக்கப் போவதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார். சதியை முறியடித்து இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது உறுதி என்றும், வாக்காளர்கள் அனைவரும் தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

நேதாஜி நகர் பகுதியில், தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது தொடர்பாக, கழகத் தொண்டர்களுடன் அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வீடுவீடாக சென்று, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனுக்கு ஆதரவு திரட்டி, தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கடைகள், ஓட்டல்கள் என பல்வேறு இடங்களிலும் பொதுமக்களை சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் திருவள்ளுவர் நகர், இளையமுதலி தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற பூத் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் திரு.தூசி.கே.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று, தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பகுதிக் கழகச் செயலாளர் திரு.சந்தானம் உள்ளிட்ட திரளான செயல் வீரர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 

ஆர்.கே.நகர் 41-வது வார்டு, ஜெ.ஜெ.நகர் பகுதியில், முன்னாள் அமைச்சர் திரு.செந்தமிழன், கழக அமைப்புச் செயலாளர் திரு. அண்ணாமலை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, கழக வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை ஆதரித்து, தொப்பி சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் நேதாஜி நகர் பகுதியில், தமிழ்நாடு ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் வீதிவீதியாக சென்று, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி பொதுமக்களிடம் பிரசுரங்கள் வழங்கி, ஆதரவு திரட்டினர். 

ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. நகரில் உள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமிய பெருமக்களிடம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திரு. தமிழ்மகன்உசேன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் திரு. முஸ்தபா உள்ளிட்டோர், அ.இ.அ.தி.மு.க. அம்மா வேட்பாளர் திரு. டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு இடங்களில் கழக வேட்பாளர் திரு.TTV தினகரன், தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேதாஜி நகரில் உள்ள முருகன் திருக்கோயில் வழிபாடு மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். 

இதனைத்தொடர்ந்து நேதாஜிநகர் மார்க்கெட் பகுதி, இந்திரா காந்தி நகர், நாவலர் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாவலர் குடியிருப்பு பகுதியில் பெருமாள்-முகிலா தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என மாண்புமிகு அம்மாவின் பெயரை சூட்டி, திரு. டிடிவி.தினகரன் ஆசி வழங்கினார். 

நேதாஜி நகரிலுள்ள கீழக்கரை, கல்வத்நாயகம் தைக்காவில் ஜமாத்தார்களை சந்தித்து திரு. டிடிவி.தினகரன் ஆதரவு திரட்டினார். 

செல்லுமிடமெல்லாம் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்து, தங்கள் அமோக ஆதரவைத் தெரிவித்தனர். 

மறைந்த மாண்புமிகு அம்மாவின் வழியில், ஆர்.கே. நகர் தொகுதியில், வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, தொப்பி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், தனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தருமாறு, திரு. TTV தினகரன் கேட்டுக்கொண்டார்.

2 comments:

  1. எதிரிகளை பந்தாடிய வேட்டைகாரன் புரட்சித்தலைவர் அணிந்த சின்னம்... தொப்பி... எதிரிகள் வீழ்வர் என்பது உறுதி... போர்களத்தில் தயங்காமல் நிற்கும் சேனாதிபதியாக துணைப் பொதுசெயலாளர் வீரம் பெருமிதம் அளிக்கிறது. எதிர்கால வெற்றியை கட்டியம் சொல்கிறது

    ReplyDelete
  2. ராஜராஜசோழனின் வீரம்....
    புரட்சித்தலைவரின் கனிவு...
    அம்மாவின் கலங்காத உள்ளம்...
    அண்ணாவின் கண்ணியம்...
    திராவிடரின் துணிவு....
    தமிழனின் அறிவு...
    அத்தனையும் ஒன்றாக
    துணைப் பொதுசெயலாளரிடம்
    காண்கிறோம் இன்று.......

    ReplyDelete