"அ.இ.அ.தி.மு.க அம்மா" துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்தனர்.
"அ.இ.அ.தி.மு.க அம்மா" பொதுச்செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்பட்டுவரும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், நாள்தோறும் பல்வேறு மாவட்டக் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் இன்று, முன்னாள் அமைச்சர் திரு. செந்தமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், திரு. மேலூர் சாமி, திரு. சந்திரசேகர், திரு. இன்பத்தமிழன், முன்னாள் அரசு கொறடா திரு. மனோகரன் உள்ளிட்டோர் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை இன்று சந்தித்துப்பேசினர்.
சென்னை தி.நகர் பகுதி அவைத் தலைவர் திரு.ராமநாதன், நடிகர் குண்டுகல்யாணம், ராஜபாளையம் ஒன்றியச் செயலாளர் திரு.முருகையா பாண்டியன், தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவையைச் சேர்ந்த திரு.சேகர், தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த திரு.P.R.N. வரதராஜன் உள்ளிட்டோரும், மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்தனர்.







