மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வென்ற, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்தொகுதியில், அம்மாவுக்கு பிறகு, கட்சியை காப்பாற்றவே வாழும் சின்னம்மாவுக்கு துணை நிற்க, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனின் வெற்றிக்கு, கழகத்தொண்டர்களும், அனைத்து அம்மாவின் விசுவாசிகளும் பாடுபடவேண்டும் என நடிகை விஜயசாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிரிகள் செய்த சூழ்ச்சியில், சின்னம்மா பட்ட துன்பங்களையும், சந்தித்த சவால்களையும், செய்த தியாகத்தையும் மறக்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.
கழகத்தை காப்பாற்ற சின்னம்மா அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றால், ஆர்.கே. நகர் தொகுதியில், கழகத்தை வெற்றிபெற செய்வதுதான் வழி என குறிப்பிட்டுள்ள விஜயசாந்தி, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனை வெற்றிபெற செய்ய தொண்டர்கள் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வென்ற, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்தொகுதியில், அம்மாவுக்கு பிறகு, கட்சியை காப்பாற்ற தன் வாழ்வையே அர்ப்பணித்துள்ள சின்னம்மாவுக்கு துணை நிற்க, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனின் வெற்றிக்கு, கழகத்தொண்டர்களும், அனைத்து அம்மாவின் விசுவாசிகளும் பாடுபடவேண்டும் என நடிகை விஜயசாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாண்புமிகு அம்மாவின் நலத்திட்டங்கள் பலவற்றையும் பாராட்டி, பாசம் காட்டும் தமிழக மக்களும், உழைக்கும் தொண்டர்களும் ஆர்.கே. நகர் தொகுதியில், கழக வேட்பாளர் டிடிவி தினகரனை அமோக வெற்றிபெற செய்யவேண்டும் என நடிகை விஜயசாந்தி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment