www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

மறைந்த மாண்புமிகு அம்மா பெரும்புகழ் சேர்த்த "இரட்டை இலை" சின்னத்தை திட்டமிட்டு முடக்க காரணமாக இருந்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, கழகத்திற்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ்-க்கும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் - சதியை முறியடித்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூளுரை

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆசியோடும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வாழ்த்துகளுடனும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திரு. TTV தினகரனுக்கு, பொதுமக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. திரு. TTV தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என தொழிலாளர்கள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட தொகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment