www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் - மாண்புமிகு அம்மாவின் கனவுத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் : அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் உறுதி


மக்களின் உழைப்பால், முயற்சியால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும், மாண்புமிகு அம்மாவின் கனவுத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டையில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில், கழக துணைப் பொதுச் செயலாளரும், வேட்பாளருமான திரு. டிடிவி. தினகரன், முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன், மக்களின் உழைப்பால், முயற்சியால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற தலைமைத் தேர்தல் பணிமனையை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment