www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

ஆர்.கே.நகர் தொகுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெருகும் மக்கள் ஆதரவு - மாண்புமிகு அம்மா மற்றும் சின்னம்மா ஆசி பெற்ற டிடிவி தினகரனை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தொகுதி மக்கள் திட்டவட்டம்





மாண்புமிகு அம்மா மற்றும் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு மக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. திரு. டிடிவி தினகரனை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் அத்தொகுதியில் வசிக்கும் மீனவர்கள், இளைஞர்கள், உட்பட பல்வேறு தரப்பினரும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். 

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

சின்னம்மாவுக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள், 95 சதவீத செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சின்னம்மா இரட்டை இலையின் சின்னத்தை மீட்டெடுப்பார் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment