www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல் : புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் தினகரன் ஆசிப் பெற்றார்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் தமது வேட்பு மனுவை வைத்து அவர் ஆசிப் பெற்றார். 

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு, தலைமைக்கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா நினைவிடத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார்.

No comments:

Post a Comment